கிசான் சம்யுக்தா மோர்ச்சா அமைப்பின் நிர்வாகிகள்: கோப்புப்படம் 
இந்தியா

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டன என்ற கேள்விக்கே இடமில்லை: விவசாயிகள் அமைப்பினர் நம்பிக்கை

பிடிஐ


வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன என்ற கேள்விக்கே இடமில்லை என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவி்த்துள்ளது.

இதையடுத்து, பிப்ரவரி 2-ம் தேதி 12-வது சுற்றுப் பேச்சுவார்த்தை மத்திய அ ரசுக்கும், விவாசயிகளுக்கும் இடையே நடக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நேற்றுப்பேசிய பிரதமர் மோடி, மத்திய அ ரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயிலான பேச்சுவார்த்தை முடிந்துவிடவில்லை, தொடர்ந்து நடக்கும். ஒரு தொலைப்பேசி அழைப்பில் பேச்சுவார்த்தையை தொடங்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே இதுவரை 11சுற்றுப் பேச்சு நடந்தும் எந்த உறுதியான முடிவும் எடுக்கவில்லை. இந்த சட்டங்களை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. அதேநேரம், மத்திய அ ரசும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த 18 மாதங்கள் நிறுத்திவைத்துள்ளது.

கடந்த 22-ம் தேதி நடந்த 11-வது சுற்றுப்பேச்சுவார்த்தைக்குப்பின், விவசாயிகள், மத்திய அரசு ஆகிய இரு தரப்பினரும் அதிருப்தியுடன் கருத்து தெரிவித்திருந்ததால், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்குமா என்ற கேள்வி எழுந்திருந்தது. இப்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

பிரதமர் மோடியின் அறிக்கையைத் தொடர்ந்து, சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பினர், நேற்று இரவு தங்களின் அறி்க்கையை வெளியி்ட்டனர். அந்த அறிக்கையில் கூறியிருப்தாவது:

வேளாண் சட்டங்கள் குறித்து பேசுவதற்காகத்தான் விவசாயிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசுடன் பேச டெல்லிக்கு வந்துள்ளார்கள். ஆதலால், மத்திய அ ரசுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது, பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டன என்ற கேள்விக்கே இடமில்லை.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட் ஆதார விலையை உறுதிசெய்ய சட்டபூர்வ அங்கீகாரம் தேவை ஆகிய கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்படும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களை பலவீனமடையச் செய்யும் நோக்கில், சிதைக்கும் நோக்கில் போலீஸார் செய்த முயற்சிகளை நாங்கள் கண்டிக்கிறோம். அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த போலீஸார் ஊக்கமளித்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.

போலீஸார் மற்றும் பாஜக குண்டர்களின் தொடர்ந்து செய்த வன்முறை மூலம் மத்தியஅரசுக்கு உள்ளூர அச்சம் ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. எங்கள் போராட்டம் நாடுமுழுவதும் அமைதியாகத் தொடரும் என உறுதியளிக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT