கரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். மருத்துவர்கள் வீட்டு தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதால், பெங் களூருவிலேயே 7 நாட்கள் தங்கி யிருக்க சசிகலா முடிவெடுத்துள்ள தாக தெரிகிறது. அதன்பின்னர் சென்னை திரும்ப திட்டமிட்டிருப்ப தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி 20-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப் பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உறவினர்கள் சி.டி.ஸ்கேன், ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளுமாறு மருத்துவர்களிடம் வலியுறுத்தினர்.
பவுரிங் மருத்துவமனையில் வசதிகள் குறைவாக இருந்ததால் கடந்த 21-ம் தேதி சசிகலா உயர் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட் டார். அங்கு அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டதை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். விக்டோரியா மருத்துவமனையின் டீன் சி.ஆர்.ஜெயந்தி தலைமை யிலான மருத்துவர்கள் சசிகலா வுக்கு உரிய சிகிச்சை வழங்கிய தால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
அவரின் தண்டனைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து 27-ம் தேதி மருத்துவமனையில் இருந்த நிலையிலேயே விடுதலை செய்யப்பட்டார். மூச்சுத் திணறல் குறைந்து இயல்பாக சுவாசிக்க முடிந்ததால், அன்றைய தினமே சாதாரண வார்டுக்கு மாற்றப் பட்டார். இதையடுத்து சசிகலா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படு வார் என தகவல் வெளியானதால், அவரை வரவேற்பதற்கான ஏற்பாடு களில் ஆதரவாளர்கள் இறங்கினர்.
இந்நிலையில் நேற்று மாலை விக்டோரியா மருத்துவமனையின் டீன் சி.ஆர்.ஜெயந்தி கூறும்போது, ‘‘சசிகலாவின் நாடி துடிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, ஆக்ஸிஜன் அளவு ஆகியவை சீராக உள்ளது. எளிய உணவை அவரே உட்கொள்கிறார். தானாக எழுந்து அமர்கிறார். ஊன்றுகோல் உதவியுடன் நடைப்பயிற்சி மேற் கொள்கிறார். சசிகலா விக்டோ ரியா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு 10 நாட்கள் நிறை வடைந்துள்ளன. கடந்த 3 தினங்களாக ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியில்லாமல் அவராகவே சுவாசித்தார். ரத்தத்தில் ஆக்ஸிஜ னின் அளவு சீராக இருந்தது. 6 நாட்களாக அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. கரோனா தொற்றுக்கான சிகிச்சை முறைகளின் அடிப்படையில் அவரை பரிசோதித்ததில் சசிகலா பூரண குணம் அடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து சசிகலாவிடம் மருத்துவர் கள் கலந்து ஆலோசித்ததன்பேரில் அவரை டிஸ்சார்ஜ் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. எனினும் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறை களின்படி சசிகலாவை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளோம்'' என்றார்.
இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் சசிகலா டிஸ் சார்ஜ் செய்யப்படுவதால் அவரது உறவினர்களும், ஆதரவாளர் களும் பெங்களூருவுக்கு வந்துள்ள னர். அவருக்கு பாதுகாப்பு அளிப் பதற்காக மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்த மெய்காப்பாளர்கள் 10 பேர் பெங்களூரு வரவழைக்கப் பட்டுள்ளனர். விஐபி என்ற அடிப்படையில் பெங்களூரு மாநகர காவல்துறையும் சசிகலா வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீ ஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
இதனிடையே கரோனா காரண மாக மருத்துவமனை நிர்வாகம் சசிகலாவை வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளதால், பெங்களூருவின் புறநகரில் உள்ள தன் உறவினரின் பண்ணை வீட்டில் 7 நாட்கள் வரை தங்கி ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளார் சசிகலா. இதனால் சசிகலா பிப்ரவரி முதல் வார இறுதியில் கார் மூலமாக சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது. அவர் சென்னை வரும்போது வழிநெடுக பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமமுகவினர் முடிவெடுத்துள்ளனர்.