குடியரசு தினத்தன்று டெல்லியில்விவசாயிகள் நடத்திய டிராக்டர்பேரணியில் பெரிய வன்முறைவெடித்தது. இந்த வன்முறையின்போது போராட்டக்கார்களில் ஒருபிரிவினர், வரலாற்றுச் சின்னமான செங்கோட்டைக்குள் புகுந்தனர். அப்போது அங்கிருந்த போலீஸாரை விரட்டி விரட்டி தாக்கினர். இதில் சுமார் 300 போலீஸார் காயம் அடைந்தனர்.
ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் செங்கோட்டையின் குவிமாடங்கள் மீது ஏறி, அங்கு சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினர். இதில் செங்கோட்டை சேதம் அடைந்துள்ளதால் ஜனவரி 31 வரை பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என தொல்பொருள் துறை தெரிவித்தது.
இதனிடையே வன்முறை தொடர்பான எந்தவொரு தகவல்அல்லது ஆதாரங்கள் இருந்தாலும்அதனை தங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு ஊடகத் துறையினர் மற்றும் பொதுமக்களை டெல்லிகாவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தொலைபேசி எண்களும், மின்னஞ்சல் முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடயவியல் குழுவினர் நேற்று செங்கோட்டைக்குச் சென்று அங்கு வன்முறை தொடர்பான ஆதாரங்களை திரட்டினர்.