இந்தியா

கால்நடை கடத்தல் வழக்கில் 12 பேர் பணியிட மாற்றம்: 3 பிஎஸ்எப் அதிகாரிகள் பணி நீக்கம்

செய்திப்பிரிவு

வங்கதேச எல்லையில் கால்நடைகள் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எப்) சேர்ந்த 3 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய - வங்கதேச எல்லையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அடிக்கடி மாயமாகி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து சிபிஐ நடத்திய விசாரணையில், பிஎஸ்எப் படையினரே கால்நடை கடத்தலில்ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. இந்தியப் பகுதிகளில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகளை கடத்தி, அவற்றை வங்கதேசத்துக்கு பிஎஸ்எப் வீரர்கள் சிலர் விற்று வந்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிஎஸ்எப் கமாண்டர் சதீஷ் குமார் என்பவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கால்நடை கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையதாக கூறி,பிஎஸ்எப் படையின் 3 உயரதிகாரிகள் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 12வீரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை பிஎஸ்எப் சிறப்பு இயக்குநர் பங்கஜ் குமார் டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.

SCROLL FOR NEXT