இந்தியா

பிஹாரில் 20-ம் தேதி புதிய அரசு பதவியேற்பு: முதல்வர் நிதிஷ்குமார் பேட்டி

பிடிஐ

பிஹாரில் புதிய அரசு அமைக்கும் நடைமுறைகள் வரும் சனிக்கிழமை (நவ. 14) தொடங்கும் என்று முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.

அண்மையில் நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பாட்னா ராஜ்பவனில் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்தை நிதிஷ்குமார் நேற்று சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வரும் 14-ம் தேதி மாநில அமைச்சரவை கூடி, தற் போதைய பேரவையை கலைப் பதற்கு ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அன்று பிற்பகல் மெகா கூட்டணிக் கட்சிகளின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். இதில் முதல்வர் தேர்வு செய்யப்படுவார். இக்கூட் டத்தில் புதிய அமைச்சரவை பதவி யேற்கும் நாள் மற்றும் இடம் முடிவு செய்யப்படும். இதன் பிறகு ஆளுநரை சந்தித்து புதிய அரசு அமைக்க உரிமை கோர உள்ளோம்.

ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு துணை முதல்வர் பதவி தரப் படுமா என்று கேட்கிறீர்கள். உரிய நேரத்தில் அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும்” என்றார்.

பிஹாரில் பாஜகவின் தோல் விக்கு பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித்ஷா மீது எல்.கே. அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்ட னர்.இதற்கு நிதிஷ்குமார் பதில் அளிக்கும்போது, “ஒவ்வொரு செய லுக்கும் அதற்கு சமமான எதிர் விளைவு ஏற்படுவது இயற்கை தான். பிஹார் தேர்தலில் பாஜகவின் அணுகுமுறை அளவுக்கு மீறிய தாக இருந்தது. தற்போது அதே அளவுக்கு எதிர்விளைவு ஏற்பட்டுள்ளது” என்றார்.

நடந்து முடிந்த தேர்தலில் மெகா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 71 இடங்களையும் காங்கிரஸ் 27 இடங்களையும் வென்றுள்ளன. கூட்டணியில் மிகப் பெரும் கட்சி யாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் உருவெடுத்துள்ள நிலையில் அக் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் குடும்பத்தில் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய அரசு பதவியேற்கும் நாள் வரும் சனிக்கிழமை அறிவிக்கப் படும் என்று நிதிஷ் குமார் கூறியுள் ளார். இந்நிலையில் வரும் 20-ம் தேதி நிதிஷ்குமாருக்கு விருப்ப மான பாட்னா, காந்தி மைதானத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா நடை பெறும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT