இந்தியா

பாதுகாப்பு இல்லை என்று கருதும் முஸ்லிம்கள் பாக். செல்லலாம்: அசாம் ஆளுநர் கருத்தால் சர்ச்சை

செய்திப்பிரிவு

பாதுகாப்பு இல்லை என்று கருதும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்று அசாம் ஆளுநர் பிபி ஆச்சார்யா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, ஆச்சார்யா குவாஹாட்டியில் நேற்று கூறும் போது, “உலகிலேயே மிகவும் சகிப் புத்தன்மை மிகுந்த நாடு இந்தியா. இங்குள்ள ஒவ்வொருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதையும் மீறி இங்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதும் முஸ்லிம்கள் தங்கள் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டனர். அதுபோல பாகிஸ்தானுக்கு அல்லது வங்கதேசத்துக்கு செல்ல விரும்புகிறவர்கள் தாராளமாக செல்லலாம்” என்றார்.

இவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT