'பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபதி ராய் 
இந்தியா

சுதந்திரப் போராட்டத்திற்கு லாலா லஜபத் ராய் பங்களிப்பு என்றும் அழியாதது: பிரதமர் மோடி அஞ்சலி

பிடிஐ

'பஞ்சாப் சிங்கம்' என்று அழைக்கப்படும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜ்பத் ராய்க்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மோகாவில் 1865ஆம் ஆண்டு ஜனவரி 28-ல் பிறந்தவர் லாலா லஜபதி ராய். இந்திய சுதந்திரப் போராட்ட முன்னோடி வீரர்களில் ஒருவரான லஜபதி ராய் 'பஞ்சாப் சிங்கம்' என அழைக்கப்படுபவர்.

மகாத்மா காந்தியின் வருகைக்கு முன்பு இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்களில் முக்கியமான மூன்று தலைவர்கள் லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் மற்றும் விபின் சந்திர பால் ஆவர்.

லஜபதி ராயின் பிறந்தநாளான இன்று அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

லாலா லஜ்பத் ராய் ஜியை அவரது ஜெயந்தி நினைவு கூர்வோம். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு என்றும் அழியாதது. தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்துக்கொண்டிருப்பது."

SCROLL FOR NEXT