இந்தியா

கரோனா; தினசரி பாதிப்புகளைவிட புதிதாக குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

செய்திப்பிரிவு

கரோனா தொற்றின் தினசரி பாதிப்புகளைவிட புதிதாக குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றின் தினசரி புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைவோரின் எண்ணிக்கை கடந்த 20 நாட்களாக தொடர்ந்து அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது மொத்தம் 1,03,59,305 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 13,320 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.91 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,689 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 1,76,498 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 1.65 சதவீதம் மட்டுமே ஆகும்.

இன்று (ஜனவரி 27, 2021) காலை 8 மணி வரை, தமிழகத்தில் 73,953 பேர் உட்பட, நாடு முழுவதும் 20,29,480 பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 194 முகாம்களில் 5,671 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 36,572 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 5,290 பேரும், மகாராஷ்டிராவில் 2,106 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 738 பேரும் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT