மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் நேற்று டிராக்டர் பேரணி நடத்தினர். இதை தடுத்து நிறுத்த முயன்ற போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் தடியடியும் நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகளை கலைக்க முயற்சி செய்தனர்.
இந்நிலையில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சுமார் 12 மணி நேரத்துக்கு செல்போன் இணையதள சேவை துண்டிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். குறிப்பாக சிங்கு, காஸிப்பூர், டிக்ரி, முகர்பா சவுக்,நங்லோய் பகுதிகளில் செல்போன் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக இதைச் செய்துள்ள தாக போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியது. இந்த உத்தரவானது நேற்று நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருந்தது.