நாட்டு மக்களுக்கு நல்ல நாள் வந்துவிட்டது. அதற்கான சரியான திசையில் மத்திய அரசு சென்று கொண்டிருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்த லில் பாஜக கூட்டணி படுதோல்வி யடைந்ததை, மூத்த தலைவர் அத்வானி கடுமையாக விமர்சித் திருந்தார். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரின் கைகளில் கட்சி சிக்கியிருப்பதாகவும், கடந்த ஓராண்டாகவே கட்சியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் பிரதமர் மோடியை மறைமுகமாக குற்றம்சாட்டும் வகை யில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு செய்த மூத்த தலைவர் அத்வானி, மத்திய அரசின் செயல்பாடு குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒட்டுமொத்த நிர்வாக முறை களும் மாறுவதற்கு சற்று கால அவகாசம் பிடிக்கும். தொடக்கம் முதலே அரசு சரியான திசையில் சென்றுக் கொண்டிருப்பதால், அதன் முடிவுகளும் சிறப்பாகவே இருக்கும் என நம்புகிறேன். பிஹார் தேர்தலுக்கு பின் கட்சிக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வு அதிகரித்துவிட்டது. அதற் கான அத்தனை முயற்சிகளையும் பாஜகவினர் மேற்கொண்டிருப் பதால், இந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவு நல்ல விதமாகவே இருக்கும். சட்டப்பேரவை மற்றும் நாடாளு மன்ற தேர்தல்களைப் போலவே உள்ளாட்சி தேர்தலும் ஒரு கட்சிக்கு மிக முக்கியமானது. அதனை பாஜகவினர் நன்கு உணர்ந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.