இந்தியா

ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகள்-2020-ஐ வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

செய்திப்பிரிவு

நாற்பது பேருக்கு ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகள்-2020-ஐ வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இவற்றில் சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் ஒருவருக்கும், உத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் எட்டு பேருக்கும், ஜீவன் ரக்‌ஷா பதக்கம் 31 பேருக்கும் வழங்கப்படும். உயிர் தியாகம் செயத ஒருவருக்கும் விருது வழங்கப்படுகிறது.

உயிர் காக்கும் மனிதத்தன்மை மிகுந்த தீரச்செயலை செய்தவர்களுக்கு ஜீவன் ரக்‌ஷா பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா, உத்தம் ஜீவன் ரக்‌ஷா மற்றும் ஜீவன் ரக்‌ஷா என்ற மூன்று பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அனைத்து தரப்பு மக்களுக்கும் இது வழங்கப்படுகிறது. ஒருவர் உயிரிழந்த பின்னரும் அவரது நற்செயலுக்காக இந்த விருது வழங்கப்படலாம்.

SCROLL FOR NEXT