இந்தியா

“ஜனநாயகத்தை வலுப்படுத்தும் தேர்தல் ஆணையம்: பிரதமர் மோடி பாராட்டு

செய்திப்பிரிவு

தேசிய வாக்காளர் தினமான இன்று, தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

“ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சுமுகமான தேர்தல்களை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் பங்களிப்பைப் பாராட்டும் தருணமாக தேசிய வாக்காளர் தினம் அமைகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை, குறிப்பாக இளைஞர்களிடையே, ஏற்படுத்துவதற்கான தினமாகவும் இது விளங்குகிறது”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT