இந்தியா

பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி: கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்

செய்திப்பிரிவு

நாட்டில் சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா, ஹரியாணா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரகாண்ட், குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய 9 மாநிலங்களில் பண்ணையில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று வரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்களில் காகம், வெளிநாட்டு பறவைகள் மற்றும் வனப் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கைக்கு பிந்தைய கண்காணிப்பு திட்டத்தை, கேரளாவில் ஒரு இடத்திலும், மத்தியப் பிரதேசத்தில் 3 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 5 இடங்களிலும் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், குஜராத், மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடைப்பெற்று வருகின்றன.

பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள அனைத்து மாநிலங்கள், பாதிப்பு, கட்டுப்பாடு குறித்து தினந்தோறும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மத்திய அரசிடம் தெரிவித்து வருகின்றன.

SCROLL FOR NEXT