சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொல்கத்தாவுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
அசாமில் இருந்து விமானத்தில் கொல்கத்தா சென்ற அவர், அங்குள்ள நேதாஜி பவனை சுற்றிப் பார்த்தார். அப்போது நேதாஜியின் பேரன்கள் சுகதோ போஸ், சுமந்தோ போஸ் உடன் இருந்தனர். பின்னர் மத்திய கலாச்சார துறை சார்பில் மாலையில் நடை
பெற்ற விழாவில், நேதாஜிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
கொல்கத்தா சுற்றுப் பயணத்தின் போது பிரதமரின் புகைப்படங்கள், வீடியோக்கள் அவரது பேஸ்புக் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியாகின. இதில் கொல்கத்தா விமான நிலையத்தில், விமானத்தில் இருந்து அவர் கீழே இறங்கிய புகைப்படம் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. அந்த புகைப்படத்துக்கு 24 மணி நேரத்தில் 11 லட்சம் 'லைக்ஸ்' குவிந்துள்ளது.
சுமார் 15,000 பேர், பிரதமர் மோடியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருத்துகளை பதிவு
செய்துள்ளனர். நேதாஜியின் பிறந்த தினம் ஆண்டுதோறும் வீர தினமாகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.