இமாச்சல பிரதேச முதல்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கை, டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும்படி, உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டது. இதனால், இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்குக்கு நெருக் கடி முற்றுவதாக கூறப்படுகிறது.
இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்த் திருப்பதாக சிபிஐ வழக்கு தொடர்ந் துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது. இந்த சூழலில், இவ்வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேண்டுமெனில், டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என, கோரி, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் கலி புல்லா மற்றும் லலித் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. முதல்வர் வீரபத்ர சிங் சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர், ‘‘இவ்வழக்கு விசாரணையை, வேறு மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தர விட்டால், நீதித்கு எதிராக தவறான கருத்தை பரப்பியது போல் ஆகி விடும். மேலும், இவ்வழக்கை நடத்த மாநில உயர் நீதிமன்றத் துக்கு அருகதை இல்லாதது போல் ஆகிவிடும். ஆகவே, வழக்கை வேறு மாநில உயர் நீதிமன்றத் துக்கு மாற்றக் கூடாது,’’ என வாதாடினார்.
எனினும், அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரா சிங் மீதான சொத்து குவிப்பு வழக்கை, டெல்லி உயர் நீதிமன்ற விசார ணைக்கு மாற்ற உத்தரவிடு கிறோம். மேற்கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு வாதத்தையும் ஏற்க, நீதிமன்றம் தயாராக இல்லை. நீதித் துறையின் நேர்மையை காக்கவும், அதன் மீது யாரும் சேற்றை வாரி பூசக் கூடாது என்பதற்காகவுமே, இந்த முடிவு எடுக்கப்பட்டது’’ என குறிப்பிட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக, வீரபத்ரா சிங்கை கைது நட வடிக்கையில் இருந்து காப்பாற்ற இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய் யப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.