இந்தியா

ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 2 ஆண்டுகள் சிறை: எய்ம்ஸ் ஊழியரைத் தாக்கிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

எய்ம்ஸ் ஊழியரைத் தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கின்படி கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜேசிபி ஓட்டுநர் ஒருவரின் உதவியோடு எம்எல்ஏ சோம்நாத் பாரதி, சுமார் 300 பேருடன் வந்து, மருத்துவமனையின் சுற்றுச்சுவர் வேலியைப் பிடுங்கியுள்ளார். அதைத் தடுக்க முயன்ற எய்ம்ஸ் காவல் ஊழியரையும் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் ரவிந்திர குமார் பாண்டே, சோம்நாத் பாரதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 323, 353, 147 ஆகியவற்றின் கீழ் சோம்நாத் பாரதிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்திய பிரிவிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT