இந்தியா

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் வெப்ப அலைக்கு 26 பேர் பலி

செய்திப்பிரிவு

ஆந்திராவில் கடற்கரை மாவட்டங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. கிருஷ்ணா மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 26 பேர் பலியாகியுள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் வயதான விவசாயக் கூலிகள் என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொடூரு மண்டலத்தில் 7 பேரும், அவனிகட்டா மண்டலத்தில் 6 பேரும், மசூலிப்பட்டிணத்தில் 4 பேரும், மற்றும் இரண்டு மண்டலங்களில் தலா 2 பேரும் வெயிலுக்கு பலியாகியுள்ளனர்.

கிருஷ்ணா மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் நீடித்து வருகிறது. 44 டிகிரி செல்சியஸிற்குக் குறையாமல் வெயில் கொளுத்தி வருகிறது.

SCROLL FOR NEXT