குஜராத் மாநிலத்தில் 17 போலீஸ் காரர்களை சுமார் 12 மணி நேரம் உணவு, தண்ணீர் இன்றி உயரதிகாரி அடைத்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குஜராத் தலைநகர் காந்திநகரின் புறநகரான கராய் பகுதியில் கூடுதல் டிஜிபி (தொழில்நுட்பம்) விபுல் விஜயின் வீடு உள்ளது. அவரது வீட்டுக்கு கடந்த புதன் கிழமை காலையில் 17 போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அப்போது விபுல் விஜய் வீட்டில் இல்லை.
17 போலீஸாரும் அந்த வீட்டின் கார் ஷெட்டில் அடைக்கப்பட்ட தாகவும் சுமார் 12 மணி நேரம் அவர் கள் உணவு, தண்ணீர் இன்றி அவதிப்பட்டதாகவும் கூறப்படு கிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட போலீஸார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவல் உயரதிகாரிகளுக்கு தெரி விக்கப்பட்டது. அவர்களின் உத்தரவின்பேரில் கார் ஷெட்டில் அடைக்கப்பட்டிருந்த 17 போலீஸாரும் மீட்கப்பட்டனர்.
போலீஸ்காரர்கள் ஷெட்டில் அடைக்கப்பட்டிருந்ததை அவர்கள் வீடியோவில் பதிவு செய்து வைத் துள்ளனர். அதனை உயரதிகாரி களிடம் ஆதாரமாக அளித்துள்ளனர்.
இதுகுறித்து விபுல் விஜய் கூறியதாவது: சம்பந்தப்பட்ட 17 போலீஸாரும் பணியில் அலட்சிய மாகச் செயல்பட்டனர். அதனால் அவர்களை எனது வீட்டில் உள்ள தற்காலிக அலுவலகத்துக்கு வரவழைத்தேன். அங்கு அவர் களை பணியாற்ற உத்தரவிட்டேன். அடைத்து வைத்திருந்ததாகக் கூறப் படுவது தவறு. இதேபோல உணவு, தண்ணீர் வழங்கப்படவில்லை என்று கூறுவதும் பொய், அவர்களுக்கு டீ, பிஸ்கெட்டுகள் வழங்கப்பட்டன என்று அவர் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடியும்வரை கூடுதல் டிஜிபி விபுல் விஜய் விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.