இந்தியா

‘‘அமெரிக்க ஜனநாயகத்தின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது'' - ஜோ பைடனுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

பிடிஐ

அமெரிக்க ஜனநாயகத்தின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றனர்.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவிக்காலம் நேற்று (19-ம் தேதி) முடிந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவி ஏற்றனர்.

அமெரிக்காவில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அதிபர், துணை அதிபர் இருவருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

''அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவின் ஜனநாயகத்தின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துக்கள்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமல் ஹாரிஸ் முதல் பெண், முதல் கருப்பு மற்றும் முதல் இந்திய-அமெரிக்கர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார்.

அமெரிக்காவின் பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள்.''

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT