இந்தியா

பறவைக் காய்ச்சல்; மகாராஷ்டிராவில் மத்திய குழு ஆய்வு

செய்திப்பிரிவு

பறவைக் காய்ச்சல் பாதிப்பைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மத்திய குழு, மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோயியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இன்றைய நிலவரப்படி, கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், பஞ்சாப் ஆகிய ஆறு மாநிலங்களில் பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கும், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களில் காகம் /வெளிநாட்டு பறவைகள்/ வனப் பறவைகளுக்கும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ஹரியாணாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பகுதிகளில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

பறவைக் காய்ச்சல் பாதிப்பைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட மத்திய குழு, மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோயியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

SCROLL FOR NEXT