மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களில் விவசாயிகளின் நலன்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களைச் சோ்ந்த 3 கார்டினல்கள், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மார் ஜார்ஜ்கார்டினல் ஆலஞ்சேரி (சிரியன்-மலபார் தேவாலய மேஜா் ஆா்ச்பிஷப்), கார்டினல் ஒஸ்வால்ட் கிரேசியஸ் (பாம்பே ஆா்ச் பிஷப்),பேசிலியஸ் கார்டினல் செலீமிஸ்(சிரியன் மலங்கரா கத்தோலிக்க தேவாலய மேஜா் ஆா்ச் பிஷப்) ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர்.
பின்னர் கார்டினல்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாட்டில் கிறிஸ்தவ மதத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தோம். எங்கள் கருத்துகளை பிரதமர் மோடி கவனத்துடன் கேட்டறிந்தார்.
மேலும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் குறித்தும் அவர் பேசினார்.
புதிய வேளாண் சட்டங்களில் விவசாயிகளின் நலன்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன. ஆனால் அதை விவசாயிகளும் விமர்சகர்களும் சரிவர புரிந்துகொள்ளவில்லை. அப்படி அந்த புதிய வேளாண் சட்டங்களில் எதிர்மறை விஷயங்கள் இருப்பதாக தெரியவந்தால் அதை வாபஸ் பெறுவோம் என்று பிரதமர் மோடி எங்களிடம் உறுதி அளித்தார்.
போராட்டம் நடத்துவதற்கு முன்னதாக அந்த சட்டங்கள் குறித்து அவர்கள் ஆழ்ந்து படிக்கவேண்டும் என்றும் பிரதமர் மோடிகோரிக்கை விடுத்தார். மேலும்மசோதாக்களை நாடாளுமன்றத் தில் நிறைவேற்றுவதற்கு முன்பாகவிரிவாக விவாதம் நடத்தப்பட வில்லை என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றை பிரதமர் நிராகரித்தார். மேலும் வேளாண் சட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கம்,சட்டங்களால் ஏற்படப் போகும்நன்மை தொடர்பான கையேட்டையும் எங்களிடம் பிரதமர் வழங்கினார்” என்றனர்.