இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடி பணக் காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

பிஹார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம், பார்பிகா நகரில் காங் கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத் தின்போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நீங்கள் அறிவீர் கள். குறிப்பாக வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் முதலீடு செய்யப்படும், இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு உரு வாக்கப்படும், வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்.

அவர் கூறியதுபோல் உங்களில் யாருடைய வங்கிக் கணக்கிலா வது ரூ.15 லட்சம் முதலீடு செய் யப்பட்டுள்ளதா? அவர் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.

பஞ்சாப், மகாராஷ்டிரா, தெலங் கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், வறுமை, கடன்தொல்லை காரண மாக தற்கொலை செய்துகொள் கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி மோடி மவுனமாக இருந்து வருகிறார். ஆனால் பணக்காரர் களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவன நண்பர்களின் நலனை கருத்தில் கொண்டு வெளிநாடுக ளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகிறார். இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT