இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,064 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,05,81,837ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை ஒரு கோடியே 1,02,28,753 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 17,411 குணமடைந்துள்னர்.
கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,00,528ஆகக் குறைந்துள்ளது.
கரோனா வைரஸால் நேற்று மட்டும் 137 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,52,556 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.
செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19-ம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.