தற்போது நடைபெற்று வரும் கேரள பட்ஜெட் கூட்டத் தொடர் | படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

கேரளாவில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொண்ட நான்கு எம்எல்ஏக்களுக்கு கரோனா

பிடிஐ

கேரளச் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட நான்கு எம்எல்ஏக்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கேரளாவில் மட்டும் அதிகபட்சமாக தினசரி கோவிட் பாதிப்பு 5,005 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 8ஆம் தேதி தொடங்கிய 22-வது கேரளச் சட்டப்பேரவைக் கூட்டம் இம்மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஜனவரி 15 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், கூட்டத்தொடரில் பங்கேற்ற நான்கு எம்எல்ஏக்களுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

நயாட்டின்காரா தொகுதியைச் சேர்ந்த கே.அன்சலான் (சிபிஎம்), கொல்லம் தொகுதி கே. தாசன் (சிபிஎம்), கொய்லாண்டி தொகுதி முகேஷ் (சிபிஎம்), பீர்மேடு தொகுதியைச் சேர்ந்த ஈஎஸ் பிஜிமால் (சிபிஐ) ஆகியோருக்குக் கரோனா தொற்று இருப்பதாகச் சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாசனும், அன்சலானும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முகேஷ் மற்றும் பிஜிமோல் ஆகியோர் தங்கள் வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

SCROLL FOR NEXT