சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக இந்தியாவில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக தேசிய சாலை பாதுகாப்பு மாதம் இன்று தொடங்குகிறது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இதனைத் தொடங்கி வைக்கிறனர்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) விகே சிங், நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கண்ட் ஆகியோரும் இதில் கலந்து கொள்வார்கள்.
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த திரைப்படம் வெளியிடப்படுவதுடன், வாகா எல்லை முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய சாம்பியன்ஷிப் பாதுகாப்பு விரைவு சவால் என்ற பயணமும் கொடியசைத்துத் துவக்கி வைக்கப்படும்.
மேலும் சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை கலந்து கொள்ளும்.