பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

தடுப்பூசி; முன்களப் பணியாளர்களை கைதட்டி ஆரவாரமாக வரவேற்ற சுகாதார ஊழியர்கள்  

பிடிஐ

மும்பை கூப்பர் மருத்துவமனையில் பணியாற்றிவரும் சுகாதார ஊழியர்கள், தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ளும் முன்களப் பணியாளர்களை உற்சாகத்தோடு கைதட்டி வரவேற்றனர்.

கரோனா வைரஸ் தடுப்பூசிகளை முதற்கட்டமாக எடுத்துக்கொள்ளப்போகும் ஊழியர்களுக்கு இனிப்புகள் மற்றும் 'ஆர்த்தி' தாலிஸ் பலகாரங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக அவர்கள் காலைமுதலே மும்பையில் உள்ள எச்.பி.டி மருத்துவக் கல்லூரி மற்றும் டாக்டர் ஆர். என் கூப்பர் நகராட்சி பொது மருத்துவமனையின் வாசலில் காத்திருந்தனர்.

மகாராஷ்டிராவில் உள்ள 285 மையங்களில் கூப்பர் மருத்துவமனைவும் ஒன்றாகும், அங்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படும் பணிகள் இன்று காலை முதல் தொடங்குகிறது.

மும்பையில் ஒவ்வொரு மையத்திலும், முதல் நாளில் 100 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும், இதன்மூலம் நகரில் மொத்தம் 28,500 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

ஒரு வலைதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு அதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக காணும் மையங்களில் இதுவும் உள்ளது.

வீடியோ இணைப்பு மூலம் பிரதமர் கூப்பர் மருத்துவமனையிலும், மராத்வாடாவில் உள்ள ஜல்னா மாவட்ட மருத்துவமனையிலும் தடுப்பூசி அமர்வுகளைக் காண்பார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி 9.63 லட்சம் டோஸ் மற்றும் 20,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி ஆகியவை விநியோகிக்கப்பட்டுள்ளன. தினமும் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும்.

மும்பையில், பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள மையத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தடுப்பூசி பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

SCROLL FOR NEXT