லக்னோ: தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி வலிமையாக உள்ளது. அதுமட்டுமின்றி, அண்டை மாநிலமான உத்தராகண்டிலும் எங்கள் கட்சி வலுவாக காலூன்றியுள்ளது. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக கட்சி கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். ஆதலால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதசம் மற்றும் உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களில் யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.தேர்தல் பணிகளை பகுஜன் சமாஜ் தொண்டர்கள் ஒற்றுமையுடன் செய்து வருகின்றனர். இவ்வாறு மாயாவதி கூறினார்.
மாயாவதியின் பிறந்த நாளை முன்னிட்டு, உத்தர பிரதேசம் முழுவதும் அவரது கட்சி சார்பில் மக்களுக்கு நேற்று நல உதவிகள் வழங்கப்பட்டன.