இந்தியா

சந்திரபாபு நாயுடுவுக்கு மோடி வாழ்த்து

செய்திப்பிரிவு

சீமாந்திரா முதல்வராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் மோடி பதிவு செய்த தனது வாழ்த்துச் செய்தியில், "இன்று சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்கும் தருணத்தில் எனது வாழ்த்த்துகளை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தை முன்னேற்றம் அடையச்செய்ய அவருக்கும் அவரது கட்சியினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆந்திர மக்களுக்கும் அரசுக்கும் மத்திய அரசு அனைத்து ஆதரவுகளையும் அளிக்கும்.

மாநிலத்தை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வதில் சந்திரபாபு நாயுடுவுக்கு இருக்கும் நிர்வாக அனுபவம் மற்றும் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை மிகப்பெரிய சொத்து"

இவ்வாறு கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT