இந்தியா

மகாராஷ்டிராவில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகள் பகிரங்க ஏலம்:  தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பிடிஐ

மகாராஷ்டிராவில் 2 இடங்களில் பஞ்சாயத்துத் தலைவர் பதவி ஏலத்தில் விடப்பட்டதை அடுத்த அங்கு உள்ளாட்சித் தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

மகாராஷ்டிராவில் நாளை ஜனவரி 15 ஆம் தேதி கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாசிக் மற்றும் நந்தூர்பார் மாவட்டங்களில் உள்ள இரண்டு கிராம பஞ்சாயத்துகளில் வாக்குப்பதிவை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிப்பதாவது:

நாசிக் மற்றும் நந்தூர்பார் மாவட்டங்களில் முறையே சர்பஞ்ச் மற்றும் உம்ரேன் மற்றும் கோண்டமாலி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றம் உறுப்பினர் பதவிகளை பகிரங்கமாக ஏலம் விடப்பட்டதாக செய்திகள் வந்தன, மேலும் இது குறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்தன.

மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் பார்வையாளர்கள், துணைப்பிரிவு அதிகாரிகள் மற்றும் தாசில்தார்கள் ஆகியோர் அனுப்பி வைத்த அறிக்கைகளை மற்றும் பல்வேறு ஆவணங்கள் மற்றும் வீடியோ காட்சிகளின் தகவல்களை அறிந்த பின்னர் குறிப்பிட்ட கிராமங்களில் தேர்தல்களை ரத்து செய்வதற்கான முடிவை ஆணையம் எடுத்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் அல்லது பிற சட்டங்களின் பிரிவு 171 (சி) படி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர்களுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT