பிரதமர் மோடி : கோப்புப்படம் 
இந்தியா

ஒற்றுமையுடனும் இயற்கையுடன் இணைந்து வாழ வழிகாட்டும் பொங்கல் பண்டிகை: தமிழர் திருநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிடிஐ


ஒற்றுமையுடனும் இயற்கையுடன் இணைந்து வாழ வழிகாட்டும் பொங்கல் பண்டிகை என தமிழர் திருநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தைத் திருநாளா பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்களும் தமிழர் திருநாளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்வி்ட்டர் பக்கத்தில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “ அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துகள் குறிப்பாக எனது தமிழக சகோதர, சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள்.
தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் சிறப்பான பண்டிகையாக பொங்கல் திருநாள் இருக்கிறது.அனைவருக்கும் நல்ல உடல்நலமும், வெற்றியும் கிடைக்கட்டும். ஒற்றுமையுடனும் இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்கு இந்த பண்டிகை நமக்கு கருணையை வழங்கட்டும்” எனத் தெரிவி்த்துள்ளார்.

மேலும் அசாமில் இன்று பிகு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அசாம் மக்களுக்கு பிரதமர் மோடி பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “ ஒவ்வொருவருக்கும் எனது பிகு பண்டிகை வாழ்த்துகள். இந்த நேரத்தி் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும். இறைவன் ஆசியுடன், அனைவரும் நலத்துடன் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு தமிழர்களுக்கு வாழ்த்துச் கூறியுள்ளார்.

அதில், “ நம்முடைய அருமையான பிரிட்டன் தமிழ் சமூகத்தினர், உலகம்முழுவதும் பரந்திருக்கும் தமிழ் சமூகத்தினர் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள். பாரம்பரியமாக தைத் திருநாள் அறுவடையை வரவேற்கும் நாளாக, கொண்டாடப்படுகிறது.

தமிழ் சமூகத்தினர் பிரிட்டனின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்பவர்களாக, பள்ளிகளில் ஆசியர்களாக, மருத்துவத்துறையில் முக்கியப் பொறுப்புகளிலும், நோயாளிகளை கனிவுடன் சிகிச்சையளிக்கும் பிரிவிலும் இருக்கிறாகள். தமிழர்களின் பங்களிப்பு மிகப்பெரிய மாற்றத்தைச் செய்திருக்கிறது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இவ்வாறு போரீஸ் ஜான்ஸன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT