ஸ்ரீபத் நாயக் 
இந்தியா

கர்நாடக சாலை விபத்தில் படுகாயமடைந்த மத்திய அமைச்சருக்கு கோவாவில் தீவிர சிகிச்சை: மனைவி விஜயா நாயக், உதவியாளர் பரிதாப உயிரிழப்பு

இரா.வினோத்

மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் நேற்று முன்தினம் இரவு கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்தில் அவரது மனைவி விஜயாநாயக், உதவியாளர் தீபக் ராமதாஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.

கோவா வடக்கு தொகுதி பாஜக எம்பியான ஸ்ரீபத் நாயக் (68) மத்திய ஆயுஷ் துறை இணைஅமைச்சராக பதவி வகித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர்வட கன்னட மாவட்டம் கோஹர்னாவுக்கு காரில் தனது மனைவி விஜயா நாயக் (58), உதவியாளர் தீபக் ராமதாஸ் (38), பாதுகாவலர் அசோக் (42) உள்ளிட்டோருடன் காரில் சென்றார். அங்கிருந்து இரவில் அங்கோலா அருகே ஹசோஹ‌மி என்ற இடத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரமரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் உள்ளிட்ட நால்வரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்துசம்பவ இடத்துக்கு விரைந்தமீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அங்கோலா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குசிகிச்சை பலனின்றி அமைச்சரின் மனைவி, உதவியாளர் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீபத் நாயக் மற்றும் பாதுகாவலர் ஆகிய இருவரும், மேல் சிகிச்சைக்காக கோவாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன‌ர்.

பிரதமர் உத்தரவு

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மத்திய அமைச்சர் பத் நாயக்கிற்கு தேவையான அனைத்து சிகிச்சை வசதிகளையும், வேறு விதமான உதவிகளையும் செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மருத்துவமனைக்கு நேரில் சென்று, ஸ்ரீபத் நாயக்கின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் பிரமோத் சாவந்த் கூறும்போது, ''மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் உடல்நிலை குறித்து கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவானந்த் பண்டேகருடன் ஆலோசனைநடத்தினேன். அமைச்சருக்குதேவையான அனைத்து அதிநவீனசிகிச்சைகளையும் வழங்குமாறுகூறியுள்ளேன். ஸ்ரீபத் நாயக் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்''என்றார்.

இதனிடையே விபத்தில் ஸ்ரீபத்நாயக்கின் மனைவி விஜயா இறந்ததற்கு முதல்வர் எடியூரப்பா, உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT