ஆந்திரப்பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி : கோப்புப்படம் 
இந்தியா

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமலாக்கப்பிரிவு நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜர்: நீதிபதி உத்தரவு

பிடிஐ



நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியது தொடர்பான வழக்கில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி நாளை(11-ம்தேதி) அமலாக்கப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர் ரெட்டி, பிரிக்கப்படாத ஆந்திரமாநிலம் இருந்தபோது, நிலங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் பல்வேறு முறைகேடுகள் எழுந்தன. இந்த நிலங்களை ஒதுக்கீடு செய்ததில் ஏராளமாந ஆதாயங்களை ராஜசேகர் ரெட்டி குடும்பத்தினர் அடைந்ததாக அமலாக்கப்பிரிவு, சிபிஐ குற்றம்சாட்டியது.

இந்த வழக்கு முதலில் உள்ளூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி பலமுறை கோரப்பட்டும் மாற்றுவதில் தாமதம் நடந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அமலாக்கப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, வழக்கு அமலாக்கப்பிரிவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்த வழக்கில் ஆந்திர முதல்வர் ஒய்எஸ். ஜெகன் மோகன் ரெட்டி 11-ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கப்பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT