பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் கேரளா, ஹரியாணா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மத்திய குழுக்கள் கேரளா சென்றடைந்தது.
ஹரியாணாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் 2 கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மத்திய பிரதேசத்தின் சிவ்புரி, ராஜ்கர், ஷாஜாபூர், அகர், விதிஷா ஆகிய மாவட்டங்களிலும், உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் உயிரியல் பூங்கா, ராஜஸ்தானில் பிரதாப்கர், தௌசா ஆகிய மாவட்டங்களிலும் பறவை காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளது. நோய்களை தடுப்பதற்குத் தேவையான ஆலோசனைகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இது வரை, ஏழு மாநிலங்களில் (கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம்) பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள இரண்டு மாவட்டங்களிலும் ஒழிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் குறித்த விசாரணைக்காக, கேரளா, ஹரியாணா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மத்திய குழுக்கள் கேரளா சென்றடைந்தது.
மாநில கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து நோயின் தற்போதைய நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து மனிதர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் மாநில, யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.