காஷ்மீரில் ராணுவம் ஏற்பாடு செய்யப்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகள் } படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

காஷ்மீரில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வகுப்புகள்: ராணுவம் ஏற்பாடு

ஏஎன்ஐ

காஷ்மீரில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வகுப்புகளை ராணுவம் ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வட காஷ்மீரின் பாரமுல்லா வட்டாரத்தில் உள்ள சோபூரின் டார்ஸூ பிராந்தியத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

எந்நெரமும் வெடிச்சத்தமும் போர் நிறுத்தமீறல்களும் சந்தித்துவரும் காஷ்மீர் எல்லையோர மக்களின் குழந்தைகள் கல்வி செயல்பாடுகளிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டனர். தற்போது கோவிட் 19 ஊரடங்கும் அவர்களை அதை முற்றிலுமாக மறக்கச் செய்துவிட்டது. எனினும் ராணுவம் குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு கல்வி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பாரமுல்லா மாவட்டத்தில் 9ஆம் வகுப்புக்கீழ் உள்ள மாணவ மாணவிகளுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை கோவிட் ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ள கற்றல் செயல்பாடுகள் மீண்டும் தொடங்குவதற்கான ஒரு புள்ளியாக அமையும் என்கின்றனர் அதிகாரிகள்.

இதுகுறித்து பாரமுல்லா மாவட்டத்தில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

''இந்த செயல்பாடு, மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து இன்னும் அற்புதமான மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை நோக்கி நகர்த்துவதற்கான முயற்சி ஆகும். கோவிட் 19 ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட கல்விச் செயல்பாடுகள் மக்களுக்கும் ஜவான்களுக்கும் இடையிலான பொதுவான உறவுகள், புரிதல்கள் ஆகியவற்றை பலப்படுத்த உதவும். ஹைதர்பேக் துறை தலைமையகத்தின் கீழ் அப்லோனா ராஷ்டிரிய ரைபிள்ஸ் பட்டாலியனின் நிங்லி ராணுவ முகாம் இந்த காவிய நடவடிக்கைக்கு முயற்சித்துள்ளது.

இவ்வாறு மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவி நீலோஃபர் ரோஷித் கூறுகையில், "எங்களுக்கு கல்வியை வழங்குவதோடு அதற்கான செலவுகளையும் ஏற்றுள்ள இந்திய ராணுவத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்றார்.

ஆங்கிலம், சமூக அறிவியல், கணிதம், அறிவியல் மற்றும் உருது உள்ளிட்ட அனைத்து கட்டாய பாடங்களையும் ஊக்குவிக்க இந்த துறையில் பெரும் ஈடுபாடுமிக்க ஐந்து பயிற்றுனர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர் ஹிலால் அகமது கூறுகையில் "நான் இங்கே உருது மொழியை கற்பிக்கிறேன், நிர்வாகம் எனக்கு தகுந்த ஊதியம் அளிக்கிறது. இரு மாத நீளப் பயிற்சியின் காலப்பகுதியின் இறுதியில் அவர்களின் கற்றலை சரிபார்க்க தேர்வுகள் நடத்தப்படும்'' என்றார்.

இங்கு பயிலும் மாணவர்களுக்கு இலவச எழுதும் பொருட்கள் வழங்கப்படுகிறது. இங்கு வரும் அனைவரும் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வெப்பநிலை திரையிடல், முகக்கவசங்கள் அணிதல், கை சுத்திகரிப்பு உள்ளிட்டவை உறுதி செய்ப்படுகின்றன.

SCROLL FOR NEXT