திருப்பதி மலை அடிவாரத்திலிருந்து திருமலைக்கு ரூ.3,500 கோடி செலவில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக திருப்பதி எம்.பி வரபிரசாத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையானை தினமும் சராசரியாக 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதுவே பிரம்மோற்சவம் போன்ற விசேஷ நாட்களில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பஸ், கார், ஜீப், பைக் போன்ற வாகனங்களில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் செல்கின்றனர். சென்னையை போன்று திருப்பதியிலும் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்துவது குறித்து கடந்த வாரம், திருப்பதி நகர வளர்ச்சி கழக அலுவலகத்தில் உயர்நிலைக் குழு ஆலோசனை நடத்தியது. இதில், ரூ. 3,500 கோடி செலவில் முதல் மலைவழிப் பாதையில் இருந்து திருமலைக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.