பிரதிநித்துவப் படம். 
இந்தியா

உ.பி. கோசாலையில் தீ விபத்து; 12 கால்நடைகள் உயிரிழப்பு: துணை ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவு

பிடிஐ

உத்தரப் பிரதேசே மாநிலத்தில் கோசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பசுகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாக்பத் மாவட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட இத் தீவிபத்து சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கெக்ரா கால்நடை மருத்துவர் முகேஷ்குமார் தெரிவித்தார்.

பாக்பத் மாவட்டத்தில் கெக்ரா காவல் நிலைய எல்லைக்குள் இச்சம்பவம் நடந்துள்ளது. இம்மாவட்டத்தின் நக்லா பாடி கிராமத்தில் தற்காலிகமாக ஒரு கோசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வந்தன.

கோசாலையில் இணைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் நேற்றிரவு திடீரென பாய்ந்த உயர்மின் அழுத்தம் காரணமக கோசாலை தீப்பிடித்து எரிந்தது.

கோசாலையின் காவலர் இந்த சம்பவம் குறித்து கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தார், ஆனால் அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து செல்வதற்கு முன்பே கோசாலை முழுவதும் தீக்கிரையானது. இதில் 12 கால்நடைகள் கடுமையான காயம் ஏற்பட்டு உயிரிழந்தன.

தீக்காயங்களுடன் கூடிய 18 கால்நடைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணைக்கு துணை ஆட்சியர் அஜய் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கால்நடை மருத்துவர் முகேஷ்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT