இந்தியா

விரக்தியடைந்த அரசியல் தலைவர்கள் கரோனா மருந்து குறித்து சந்தேகம் எழுப்புகின்றனர்: முக்தார் அப்பாஸ் நக்வி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கோவிஷீல்டு மற்றும் கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் பயன்பாட்டுக்குகொண்டுவர மத்திய அரசு அனுமதிவழங்கியது. இதன் மூலம் இன்னும்சில நாட்களில் இந்தியாவில் 2 கரோனா தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இந்நிலையில் இந்த தடுப்பு மருந்துகளின் திறன் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று மும்பையில் கூறும்போது, “கரோனா வைரஸை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காகவே தற்போது தடுப்பூசிகளை இந்தியாவில் அனுமதித்துள்ளோம். ஆனால் அரசியலில் பாஜகவை வெல்ல முடியாமல் வெறுத்துப் போன காங்கிரஸ்கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர்தடுப்பு மருந்துகளின் திறன் மீதுசந்தேகம் எழுப்பி வருகின்றனர். அவர்கள் அரசியலிலும் தோல்விகண்டவர்கள். அதனால்தான் விரக்தியடைந்து அவ்வாறு பேசி வருகின்றனர்” என்றார்.

SCROLL FOR NEXT