ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்திக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்திக்கும் லபிகா மித்ராவுக்கும் கடந்த 2010-ம் ஆண்டில் திருமணம் நடை பெற்றது. தனது கணவர் கொடுமை படுத்துவதாக டெல்லி துவாரகா போலீஸ் நிலையத்தில் லிபிகா கடந்த ஜூனில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சோம்நாத் பார்தி மீது குடும்ப வன்முறை, வரதட் சிணை கொடுமை, கொலைமுயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் விதித்த கெடு காரணமாக கடந்த திங்கள்கிழமை டெல்லி போலீஸில் அவர் சரண் அடைந்தார்.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சோம்நாத் பார்திக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு அவரது வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் கோரினார். ஆனால் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு அக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இவ்வழக்கை விசாரிக்கும் மாஜிஸ்திரேட் என்ன உத்தர விடுகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அதன்பின்னர் நியாயமான காரணங்கள் இருந் தால் ஜாமீன் குறித்து திங்கள் கிழமை பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மனைவியோடு சமரசமாகச் செல்ல சோம்நாத் பார்தி ஏற் கெனவே விருப்பம் தெரிவித்துள் ளார். அதனை லிபிகா ஏற்றுக் கொள்கிறாரா என்பது குறித்து அவரின் கருத்தறிய வரும் திங்கள் கிழமை அவர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கள் உத்தரவிட்டனர்.