இந்தியா

நவராத்திரி பிரம்மோற்சவம் 3-ம் நாள் விழா: சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா

செய்திப்பிரிவு

திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான நேற்று காலை, சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இரவு, தேவி, பூதேவி சமேத மாக முத்துப் பல்லக்கு வாகனத் தில் உற்சவர் காட்சி அளித்தார்.

திருப்பதியில் நவராத்திரி பிரம் மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் 3-ம் நாளான நேற்று காலை உற்சவரான மலையப்ப சுவாமி, யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத் தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார். காலை 9 மணி முதல் 11 மணி வரை நடந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாடவீதிகளில் பல மாநிலத்தை சேர்ந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள தாளங்களுடன் வாகன சேவை நடைபெற்றது.

இதையடுத்து இரவு 9 மணி முதல் 11 மணி வரை முத்துப் பல்லக்கு வாகனத்தில் தேவி, பூதேவி சமேதமாய் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

SCROLL FOR NEXT