இந்தியா

கரோனா தொற்று; சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2.5 லட்சத்திற்கும் குறைவாக பதிவு

செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.5 லட்சத்திற்கும் குறைவாக 2,47,220 ஆக பதிவாகியுள்ளது.

இது மொத்த பாதிப்பில் 2.39 சதவீதமாகும். 29 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 10,000-க்கும் குறைவானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 37 நாட்களாக புதிய தொற்றுக்களை விட குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,177 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 20,923 பேர் புதிதாக குணமடைந்தனர்.

நாட்டில் மொத்தம் 99,27,310 பேர் (96.16%) குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 96,80,090 ஆக பதிவாகியுள்ளது.

புதிதாக குணமடைந்தவர்களில் 78.10 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 4985 பேரும், மகாராஷ்டிராவில் 2110 பேரும், சத்தீஸ்கரில் 1963 பேரும் குணமடைந்துள்ளனர்.

81.81 சதவீத புதிய தொற்றுக்கள் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. கேரளாவில் 5328 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3218 பேரும், சத்தீஸ்கரில் 1147 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 217 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 69.59 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 51 பேரும், மேற்கு வங்காளத்தில் 28 பேரும், கேரளாவில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT