தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அது தொடர்பாக அரசிடம் அனுமதிகோரும் போது தவறான தகவல்களை அளித்தால் கிரி மினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித் துள்ளது.
முக்கியமாக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று 2 ஆண்டு களுக்குள் வேறு நிறுவனங்களில் சேருபவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:
அரசுத் துறையில் முக்கியப் பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பல அரசுத் துறை முக்கிய நடவடிக் கைகள் தெரியும். எனவே அவர்கள் ஓய்வுக்குப் பிறகு தனியார் நிறுவனம், தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றுவதாக இருந்தால் அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று ஏற்கெனவே விதியுள்ளது.
புதிய பணிகளில் அவர்களின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடிய வகையிலும், நாட்டின் ஒருங்கிணைப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகை யிலும், வெளிநாட்டு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த அனுமதி கட்டாயமாக உள்ளது.
இனி இவ்வாறு அனுமதி பெறும்போது அரசுப் பணியில் இருந்தபோது அவர்கள் தெரிந்து கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசு விஷயங்களை வெளியே தெரிவிக்கக் கூடாது என்ற உறுதிமொழியையும் அவர்கள் அளிக்க வேண்டும்.
இதனை அவர்கள் மீறினால் கிரிமினல் நடவடிக்கைகளை எதிர் கொள்ள வேண்டியது இருக்கும்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் பல தொண்டு நிறுவ னங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை தேசத்துக்கு எதிரான செயல்களுக்கு பயன் படுத்துவது தொடர்பான குற்றச் சாட்டுகள் சமீப காலத்தில் அதிகரித் துள்ளன. எனவேதான் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
மேலும் ஓய்வூதியதாரர்கள் தாங்கள் பணியில் சேரும் நிறுவனம் அல்லது தொண்டு அமைப்பின் பான் கார்டு, வருமான வரி விவரம், முகவரி, அங்கு நடைபெறும் பணிகள் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்க வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.