ராகுல் காந்தி | கோப்புப் படம். 
இந்தியா

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது; இதுதான் மோடி அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஏஎன்ஐ

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடுமுழுவதும் நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வேலை இழப்புகள் குறித்த ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளை மேற்கோள் காட்டி முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், பணவீக்கத்தால் பொதுமக்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள், விவசாயிகள் தங்கள் நண்பர்களின் (மிட்ரா) சட்டத்தால் தாக்கப்படுகிறார்கள், இதுதான் மோடி அரசு.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயி தன்னம்பிக்கை பெறாமல் நாடு ஒருபோதும் தன்னம்பிக்கை அடைய முடியாது.’’

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னதாக ராகுல் காந்தி இத்தாலிக்கு குறுகிய கால பயணமாக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டார். அவரது பயணத்தை பாஜக விமர்சித்தது. இதற்கு காங்கிரஸ் பதிலடி தந்தது. பயணம் குறித்த எத்தகைய எதிர்வினையும் ஆற்றாதநிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவர் இன்னும் நாடு திரும்பவில்லை.

SCROLL FOR NEXT