பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

ஸ்ரீநகரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

பிடிஐ

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.

ஸ்ரீநகரில் பரிம்போரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை அப்பகுதிக்கு விரைந்தனர்.

இதுகுறித்து ஸ்ரீநகர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

செவ்வாய்க்கிழமை மாலை பரிம்போரா பகுதியில் தேடுதல் நடவடிக்கையின் போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

பின்னர் அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர். துப்பாக்கிச் சண்டையின்போது தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT