இந்தியா

ஏஜென்டுகள் மூலம் வெளிநாடுகளில் வேலை: குடிமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

பிடிஐ

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் வாயிலாக மட்டுமே வெளிநாட்டு வேலைக்குச் செல்லுமாறு குடிமக்களுக்கு மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.

>சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்காகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்தியப் பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் வாயிலாக மட்டுமே வெளிநாட்டு வேலைக்குச் செல்லுமாறு குடிமக்களுக்கு வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை நான் முன்வைக்கிறேன். அரசு அங்கீகாரம் பெற்ற நம்பகத்தன்மை வாய்ந்த ஏஜென்டுகள் வாயிலாக மட்டுமே வெளிநாட்டு வேலைக்குச் செல்லுங்கள்.

வேறு யார் மூலமாவது நீங்கள் வெளிநாட்டுக்குச் செல்லும்போது அங்கு ஏதாவது சிக்கலில் நீங்கள் மாட்டிக் கொண்டால் உங்களுக்கு உரிய உதவி கிடைக்க தாமதமாகும்.

போலி ஏஜென்டுகளுக்கு வெளிநாடுகளின் சட்ட திட்டங்கள் தெரியாது. எனவே அவர்கள் உங்களுக்கு நீங்கள் செல்லும் நாட்டைப் பற்றி முழுமையான தகவலை அளிக்கமாட்டார்கள். அங்குதான் எல்லா சிக்கலும் ஆரம்பமாகிறது.

மொழி தெரியாது ஒரு புதிய நாட்டுக்கு நீங்கள் செல்லும் முன்னர் அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் எனவே அங்கீகரிப்பட்ட ஏஜென்டுகள் வாயிலாக மட்டுமே வெளிநாட்டு வேலைக்குச் செல்லுங்கள். இல்லாவிட்டால் சொந்த நாட்டிலேயே இருந்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுவது மிகமிக அவசியம்" என்றார் அவர்.

SCROLL FOR NEXT