பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

காஷ்மீரில் தீவிரதிவாதிகளுடன் தொடர்புடையவர் கைது: வெடிபொருள் பறிமுதல்

ஏஎன்ஐ

காஷ்மீர் கிராமத்தில் தீவிரதிவாதிகளுடன் தொடர்புடையவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து வெடிபொருளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவந்திபோரா காவல்துறையினர் 42 ராஜஸ்தான் ரைபிள்ஸ் (ஆர்ஆர்) மற்றும் 180 பிஎன் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) உடன் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதுகுறித்து அவந்திபோரா காவல்துறை அதிகாரிகள் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், 42 ஆர்ஆர் மற்றும் 180 பிஎன் சிஆர்பிஎப் உதவியுடன் அவந்திபோரா காவல்படை இன்று காலை சையதாபாத் டிரால் கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஒரு குறிப்பிட்ட வீட்டைத் தேடியது.

அவந்திபோராவைச் சேர்ந்த சையதாபாத் டிரால் கிராமத்தில் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவர் சையதாபாத் பஸ்துனாவில் வசிக்கும் முகமது அஷ்ரப் கானின் மகன் அமீர் அஷ்ரப் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வசம் இருந்த சீன கை கையெறி குண்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர் தனது வீட்டின் வளாகத்தில் ஒரு பிளாஸ்டிக் குடுவையில் மறைத்து வைத்திருந்தார்.

பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவருக்கு எதிராக டிரால் காவல் நிலையத்தில் முதல் சட்ட அறிக்கை (எப்ஐஆர்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறை அறிக்கைல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT