உத்தரப் பிரதேசத்தில் மோடிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஹித். இவர் சமூக ஊடகங்களில் பிரதமரைப் பற்றி ஆட்சேபகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சம்பல் காவல்துறை அதிகாரி கே.கே.சரோஜ் கூறியதாவது:
சமூக ஊடகங்களில் பிரதமருக்கு எதிரான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
இதுகுறித்து ராஜ்புரா காவல் நிலையத்தில் பிரதாப் சிங் என்பவர் புகார் அளித்தார். அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் வீடியோவையும் ஒப்படைத்தார். அதில் ரோஹித் என்ற இளைஞர் பிரதமருக்கு எதிராக அநாகரீகமான கருத்துக்களை தெரிவித்துள்ளதை காணமுடிகிறது.
அவரது புகார் சரிபார்க்கப்பட்ட நிலையில் ரோஹித், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.