கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
''மக்களுக்கு எனது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் கொள்கைகளும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு பலம் தருகின்றன
அவரது வாழ்க்கைப் பாதை ஒரு நியாயமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான வழியைக் காட்டட்டும்.
எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துக்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமித்ஷா வாழ்த்து
உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அமைச்சர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
"அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்! இந்த பண்டிகை சமுதாயத்தில் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் உணர்வை மேம்படுத்தட்டும்"
இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.