ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் மீது அந்நாட்டு போலீஸாரும், ராணுவத்தினரும் நடத்தி வரும் அடக்குமுறை, அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் உரிமைக்காக தொடர்ந்து பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகின்றனர். இதில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு போராட்டத்தின்போது பொது மக்களை பாகிஸ்தான் போலீ ஸாரும், ராணுவத்தினரும் கொடூர மாக அடித்து உதைத்து விரட்டும் வீடியோ தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பியுள்ளனர். இதை யடுத்து ராணுவத்தினர் அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இளைஞர்களை வற்புறுத்தி வருவதாகவும், அதனை ஏற்க மறுப்பவர்களை பிடித்துச் சென்று சித்திரவதை செய்வதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்தர் சிங், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடப்பது என்ன என்பதை உலகமே இப்போது தெரிந்து கொண்டிருக்கும். அங்குள்ள மக்கள் மனநிலை என்ன என்பதும் வெளிப்படையாக தெரிந்துள்ளது. இது தொடர்பாக எங்களுக்கு முன்பே உளவு தகவல்கள் கிடைத்தன. இப்போது தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான வீடியோ அதனை உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.
ஆனால் பாகிஸ்தான் இதனை மறுத்துள்ளது.
மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பியுள்ளனர். இதையடுத்து ராணுவத்தினர் அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.