ராகுல் காந்தி 
இந்தியா

போராடும் விவசாயிகளுக்கு மக்களும் ஆதரவு தர வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

ஏஎன்ஐ

டெல்ல எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு மக்களும் ஆதரவு தர வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுததியுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரும் விவசாயிகள் போராட்டம் டெல்லி எல்லைகளில் 29வது நாளாக நடந்துவருகிறது. இன்று, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பெறப்பட்டுள்ள 2 கோடி கையொப்பங்களுடன் இன்று ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து மனு அளித்து விவசாயிகள் போராட்டத்தில் தலையிடுமாறு கோர முடிவு செய்தனர்.

குடியரசுத் தலைவர் மாளிகை அருகே இருக்கும் விஜய் சவுக் பகுதியிலிருந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாகச் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்க சென்றனர். பேரணி செல்வதற்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணி செல்ல தொடர்ந்து முயன்றபோது, போலீஸார் அவர்களைத் தடுத்து கைது செய்தனர்.அதேசமயம், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட சிலர் மட்டும் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக விவசாயப் போராட்டம் குறித்து ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது:

''புதிய சட்டங்கள் விவசாயிகளை ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுவதாக ஊடகங்களே தெரிவித்துவருகின்றன. இதுபோன்ற ஒரு சோகத்தைத் தவிர்ப்பதற்காக இந்தியாவில் உள்ள விவசாயிகள் ஏராளமானோர் ஒன்றுகூடி விவசாய எதிர்ப்பு சட்டங்களுக்கு எதிராக போராடுகிறார்கள். இந்த சத்தியாக்கிரகத்தில், நமது மக்கள் அனைவரும் நாட்டின் அன்னதாதாவை (நாட்டிற்கு உணவளிப்போன்) ஆதரிக்க வேண்டும். "

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT