இந்தியா

மேற்கு வங்க விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட அமித் ஷா

பிடிஐ

மேற்கு வங்கம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார்.

பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாள் பயணமாக நேற்று மேற்கு வங்கம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இன்று கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நவீனத்துவத்திற்கும், ஆன்மிகத்திற்கும் விவேகானந்தர் முன்மாதிரி எனக் கூறினார்.

மிட்னாப்பூர் சென்ற அமித் ஷா, புரட்சியாளர் குதிராம் போஸுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இரு கோயில்களில் தரிசனம் செய்தார். இந்தப் பயணத்துக்கு இடையே மெதீனிபூர் மாவட்டத்தின் பாலிஜுரி பகுதியில் உள்ள விவசாயி சனாதன் சிங்கின் வீட்டுக்கு அமித் ஷா சென்றார்.

அவருக்கு வாழை இலையில், மேற்கு வங்கத்தின் பிரத்யேக சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. அவருடன் பாஜக தேசியப் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, பாஜக தேசியத் துணைத் தலைவர் முகுல் ராய் மற்றும் மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் ஆகியோர் இருந்தனர்.

SCROLL FOR NEXT